எம் தாயின் பாதத்தை வணங்கி இம்மலரைச் சமர்ப்பணம் செய்கின்றோம். அம்மா உந்தன் எண்ணங்களும், வார்த்தைகளும் எம் இதயத்தை நிறைத்து நிற்கின்றது. தமக்கென வாழா தியாகச்சுடர் நீங்களம்மா. சிறுவயது முதலே எல்லோரோடும் அன்பு, பாசம், பொறுமை எனும் பெண்மைக்கே உரிய உயரிய பெருங்குணங்களுடன் வாழ்ந்த அன்புருவம்மா நீங்கள். இல்வாழ்வில் இதயசுத்தியுடன் வாழ்ந்து பிள்ளைகள் நலனே தன்வாழ்வாய் இருந்தீர்கள். நல்லறிவு புகட்டி நல்வழிகாட்டி எமக்கு முன் மாதிரியாய் வாழ்ந்து காட்டிய அன்புத்தெய்வமே! தாய்மையின் இருப்பிடமே தெய்வம் அம்மாவாய் வந்தால் அது தாங்கள் என்பதை எமக்கு உணர்த்தியவரே! – நீங்கள் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் எம் உள்ளத்தில் என்றும் தெய்வமாய் வாழ்வீர்கள் தாயே! கண்ணீரால் மலர்தூவி உங்கள் பாதக்கமலத்தில் எம் வேதனைகளையும் கவலைகளையும் சமர்ப்பித்து வணங்குகின்றோம் அம்மா! இம்மலரை தாயின் பாதத்திருவடியில் எம் குடும்பச் சார்பாக சமர்ப்பணம் செய்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! சுபம்
திருப்பதி அருணாசலம்
அன்னை மடியில்
23/06/1934
ஆண்டவன் அடியில்
24/10/2019